நேபாள நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 6621 ஆக உயர்வு!

9cecbd09-2a9b-4d7e-a0a4-62166076f698_S_secvpfநேபாளத்தில் கடந்த 25–ந் தேதி 7.9 ரிக்டரில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

பூகம்பம் நடந்து ஒருவாரமாகியும் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. மீட்பு பணியில் இந்தியா தீவிர பங்கு வகிக்கிறது. அது தவிர பல்வேறு வெளிநாடுகளும் மீட்பு குழுவை அனுப்பி இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும பணியில் ஈடுபட்டுள்ளன.

இடிபாடுகளை அகற்றும் போது தொடர்ந்து குவியல் குவியலாக பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுவரை 6621 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

14,023 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணியில் 20–க்கும் மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. மோப்ப நாய்கள் மற்றும் அதிநவீன கருவிகளுடன் உயிருடன் இருப்பவர்கள் மீட்கப்படுகின்றனர்.

பூகம்பம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில் இனி யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என நேபாள அரசு அறிவித்துள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லட்சுமி பிரசாத் தகவல் கூறும்போது,

‘‘கடந்த ஒருவாரமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் இன்னும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை’’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top