சென்னை சென்ட்ரலில் சாலையில் திடீரென உருவான பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு!

central_railway_stationசென்னை சென்ட்ரலில் சாலையில் திடீரென பள்ளம் உருவானது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி சாலையில் நேற்றிரவு திடீர் பள்ளம் உருவானது. 12 அடி விட்டமும் 7 அடி ஆழமும் இருந்த அந்த தீடீர் பள்ளத்தால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாகராட்சி அதிகாரிகள் பள்ளத்தை மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டனர். மெட்ரோ ரயில் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த சிமென்ட் கலவையை கொட்டி அந்த பள்ளம் நிரப்பபட்டது. இதனால் அந்த சாலையில் சில மணி நேரம் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top