நேபாள நிவாரண நிதிக்கு 415 மில்லியன் டாலர்கள் தேவைப்படும்: ஐ.நா. மதிப்பீடு

earthquake toll in nepalநேபாளத்தை தலைகீழாக புரட்டிப்போட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை ஆறாயிரத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 415 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படும் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

இந்த நில நடுக்கத்தில் நேபாளத்தில் உள்ள 75 மாவட்டங்களில் 39 மாவட்டங்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளது. இங்கு சுமார் 70 ஆயிரம் வீடுகள் தரைமட்டமாகி உள்ளன. கோடிக்கணக்கான மக்கள் குடிக்க நீரின்றியும், உண்ண உணவின்றியும் தவித்து வருகின்றனர்.

அடுத்த 3 மாதங்கள் வரை இவர்களுக்கான உடனடி உணவு பாதுகாப்புக்கு 128 மில்லியன் டாலர்களும், தற்காலிக தங்குமிடங்களை ஏற்படுத்த 50 மில்லியன் டாலர்களும், கழிவுநீரகற்றும் பணிகளுக்கு 63 மில்லியன் டாலர்களும் செலவாகும் என குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, இந்தப் பணிகளை நிறைவேற்ற தேவையான நிதியுதவிகளை வழங்குமாறு சர்வதேச சமுதாயத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top