ஐபிஎல் போட்டியில் பெங்களூரு – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

rcb-vs-rr2பெங்களூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 29 ‘லீக்’ ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்– ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் 8 ஆட்டத்தில் 5 வெற்றி, 2 தோல்வி, ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை என 11 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் உள்ளது.

அந்த அணி முதலில் தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தது. அதன்பின் 2 ஆட்டங்களில் தோற்றது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அந்த அணியில் கேப்டன் வாட்சன், ரகானே, ஸ்டீவன் சுமித், பவுல்க்னெர், பின்னர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

அந்த அணி 6–வது வெற்றி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. மேலும் முந்தைய ‘லீக்’ ஆட்டத்தில் பெங்களூர் அணியிடம் தோற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இருக்கிறது.

பெங்களூர் அணி 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணியில் கேப்டன் கோலி, கிறிஸ்கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகிய சிறந்த அதிரடி வீரர்கள் உள்ளனர்.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் மிரட்டி வருகிறார். அவரது வருகை பெங்களூர் அணிக்கு உத்வேகத்தை அளித்து இருக்கிறது. கடந்த 2 போட்டிகளில் அபாரமாக செயல்பட்டார். அவர் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

உள்ளூர் மைதானத்தில் நடந்த 3 போட்டியிலும் அந்த அணி தோல்வியையே தழுவியது. இதனால் சொந்த மண்ணில் முதல் வெற்றியை பெற போராடும். இரு அணிகள் சமபலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top