மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கண்டித்து தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம்

16மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து 11 மத்திய தொழிற்சங்கங்கள் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் பஸ், லாரி மற்றும் ஆட்டோக்கள் ஓடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சாலை விபத்துகளை குறைப் பதற்காக மோட்டார் வாகன சட்டத்தைத் திருத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்காக ஒரு கமிட்டி அமைத்துள்ளது. இந்தக் கமிட்டி அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் வகையில், பல முக்கிய அம்சங்களைக் கொண்ட வரைவு சட்டத் திருத்தத்தை உருவாக்கியுள்ளது.

அதில், அபராதத் தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள தாக தகவல்கள் வெளியாகியுள் ளன. குறிப்பாக, ஹெல்மெட் இல் லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500, இன்சூரன்ஸ் இன்றி ஓட்டினால் ரூ.10,000, ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டினால் ரூ.10,000, செல்போன் பேசிக் கொண்டே ஓட்டினால் ரூ.5,000, தொடர்ந்து 3 முறை சிக்கி னால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற பரிந்துரைகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஓட்டு நர் உரிமம், வாகனப் பதிவு போன் றவற்றுக்கான கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், மாநிலங்களில் உள்ள பொது போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த மசோதாவைக் கண்டித்து நாளை (30-ம் தேதி) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இது தொடர்பாக தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் கி.நடராஜன் ஆகி யோர் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டுவரவுள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவில் மாநில அரசுகளின் போக்குவரத்துத் துறை உரிமை களை பறிக்கும் அம்சங்கள் இருக் கின்றன. மாநில அரசுகளுக்கு வர வேண்டிய வாகன வரி, மத்திய அரசுக்கு சென்றுவிடும் அபாயமும் உள்ளது. எனவே, இந்தப் புதிய சட்ட மசோதாவை எதிர்த்து தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 11 மத்திய தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடு பட உள்ளோம். பல்வேறு மாநிலங் களில் செயல்பட்டு வரும் 43-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொள் கின்றன. நாடு முழுவதும் அனைத்து தரப்பட்ட வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்களும் பங்கேற்பர்.

தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் பஸ், லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நாளை இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன (ஏஐடியுசி) பொதுச் செயலாளர் சேஷசயனம் கூறும்போது, ‘‘மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் சார்பில் சென்னையில் 7 இடங்களில் மக்கள் பிரச்சார கூட்டம் நடத்தப்பட்டது. வேலைநிறுத்தத்தில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் பங்கேற்கும். தமிழகம் முழுவதும் உள்ள 2.40 லட்சம் ஆட்டோக்கள் நாளை ஓடாது. சென்னையில் 73 ஆயிரம் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், டாடா மேஜிக், அபே ஆட்டோக்கள் இயங்காது’’ என்றார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top