உ.பி. -யில் தாழ்த்தப்பட்ட இளைஞரை மனித கழிவை உண்ண கட்டாய படுத்திய கொடுமை!

dalit-sexual-assaulttஉத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் கோத்வாலி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பர்காலி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்த் (வயது 24). அந்த பகுதியில் வேறு ஒருசமூகத்தை சேர்ந்த வாலிபர்கள் கோவிந்தை அடித்து துன்புறுத்தி உள்ளனர். ஒரு கட்டத்தில் எல்லைமீறிய அவர்கள் கோவிந்த்தை மனித கழிவை உண்ண கோரி அடித்து உதைத்து உள்ளனர்.

இதுகுறித்து கோவிந்தின் சகோதரர் போலீசில் புகார் செய்து உள்ளார். இதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுகுறித்தும் குற்றவாளிகள் லவ்குஷ்தியாகி, வினோத்தியாகி ஆகிய 2 பேரை கைது செய்து உள்ளனர். ஆனால், அவர்கள் குற்றவாளிகள் கோவிந்த் திருடி உள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் அடித்து உதைத்ததாக கூறி உள்ளனர்.

பாதிக்கபட்ட கோவிந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top