நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 4,352 ஆக உயர்வு!

Kathmandu Struck By Powerful Earthquakeநேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கத்தில் காயமடைந்த 8 ஆயிரத்து 63 பேர் இதுவரை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 60 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் சுஷில் கொய்ராலா, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போதிய அளவில் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் , மக்களை மீட்பதற்கே அரசு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருவதாக கூறிய கொய்ராலா, காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்ய மக்கள் முன் வர வேண்டும் என வலியுறுத்தினார். இதனிடையே அடுத்தடுத்த நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் தெருக்களிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top