அதிகாரத்தை பகிர்வுக்கு வழிவகுக்கும் 19ஏ சட்டத்திருத்தம் இலங்கை பாராளுமன்றத்தில் தாக்கல்

283இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் 19ஏ அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை பாராளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் சிறிசேனா இன்று தாக்கல் செய்தார்.

கடந்த வாரமே தாக்கல் செய்யப்படவிருந்த இச்சட்டத்திருத்தம் ராஜபக்சே ஆதரவாளர்களின் எதிர்ப்பால் தாமதமாக நேரிட்டது. இந்நிலையில் இன்று இம்மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய சிறிசேனா கூறுகையில், ‘அதிபரின் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. இதன் மூலம் எனது பெருந்தன்மையை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்’ என்றார்.

37 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த வரலாற்று சிறப்புமிக்க சட்டத்திருத்தம் தாக்கல் செய்யும் போது, பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் அவையில் இருந்தனர். இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதன் மூலம், நல்ல நிர்வாகத்தை வழங்கும் பொருட்டு பல்வேறு ஆணையங்களை அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இம்மசோதா மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெறுகிறது. 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற 150 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

ராஜபக்சே ஆதரவு உறுப்பினர்கள் இம்மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே இம்மசோதா நிறைவேறுவது சாத்தியம் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top