நேபாளத்தில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை மீட்க இந்தியாவிடம் ஸ்பெயின் கோரிக்கை

281நேபாளத்தில் 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரழிவில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், மீட்புப் பணியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மீட்புக்குழுவினருடன் நிவாரணப் பொருட்களையும் தாராளமாக அனுப்பியுள்ளது. அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பத்திரமாக மீட்டு அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில், நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் ஸ்பெயின் நாட்டு மக்களை மீட்பதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி கார்சியா-மார்கலோ, பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அப்போது, தேசிய பேரிடரால் பாதிக்கப்படும் அனைத்து நாடுகளுக்கும் இந்தியா உதவி செய்துவருவதை சுட்டிக் காட்டிய மோடி, ஸ்பெயின் நாட்டிற்கும் சாத்தியமுள்ள அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.

மேலும் ரெயில்வே துறையில் ஒத்துழைப்பு குறித்தும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தில் ஸ்பெயின் நிறுவனங்கள் பங்கேற்று, இந்தியாவில் உற்பத்தி தளங்களை அமைக்க வேண்டும் என்றும் மோடி அழைப்பு விடுத்தார்.

மேலும், ஸ்பெயின் பிரதமரின் அழைப்பை ஏற்ற மோடி, ஸ்பெயினுக்கு 2016ல் சுற்றுப் பயணம் செய்வதாகவும் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top