நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,218 ஆக உயர்வு!

earthquake toll in nepalநேபாளத்தில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 218ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 500 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், பல இடங்களில் மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளை தொடர்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனிடையே எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்திருக்கிறது.

இதனிடையே பல்வேறு நாடுகளும் நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றன. இந்தியா சார்பாக 13 ராணுவ விமானங்கள் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 700 பேர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top