300 அடி நீளம் கொண்ட உலகின் மிக நீளமான விமானம்:இங்கிலாந்தில் அறிமுகம்

flight300 அடி நீளம் கொண்ட உலகின் மிக நீளமான விமானத்தை இங்கிலாந்து அறிமுகம் செய்துள்ளது. தற்கால நவீன சொகுசு விமானங்களாக கருதப்படும் ஏர்பஸ் 380, போயிங் 747-8 போன்றவற்றை விட இந்த புதிய விமானம் 60 அடி அதிக நீளம் கொண்டதாகும்.50 டன் சரக்கு மற்றும் 50 பயணிகளுடன் ஆகாயத்தில் மட்டுமின்றி நீரிலும் ஊர்ந்து செல்லும் ஆற்றலுடன் சுமார் 60 மில்லியன்

பவுண்டுகள் விலையில் இந்த விமானம் அமெரிக்க விமானப்படைக்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது.

சமீபத்தில் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலையையடுத்து அந்நாடு சில சிக்கன நடவடிக்கைகளை

மேற்கொண்டது. அப்போது இந்த விமானத்துக்காக முன்னர் அளிக்கப்பட்டிருந்த ஆர்டர் ரத்து செய்யப்பட்டது.

குறைந்த ஓசையுடனும், எரிபொருள் சிக்கனத்துடனும் இயங்கக் கூடிய இந்த விமானம், நிரப்பப்பட்ட எரிபொருளுடன் சுமார் 3

வார காலம் தரையிறங்காமல் ஆகாயத்திலும், நீரிலும் செல்லும் என்பது  குறிப்பிடத்தக்கது.
இந்த நீளத்தை எதிர்வரும் காலத்தில் 390 அடியாக உயர்த்த இந்த விமானத்தை தயாரிக்கும் இங்கிலாந்தின் ஹெச்.ஏ.வி. நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top