கொல்கத்தாவில் இன்று இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்

16-1429194210-souravganguly-dravid-600இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளச்சர் பதவி காலம் கடந்த உலக கோப்பை போட்டியோடு முடிந்தது. இந்த நிலையில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பயிற்சியாளர் பதவி கேட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் டால்மியாவை சந்தித்தார் என்று தகவல்கள் வெளியானது. இதை கங்குலி மறுத்தார்.

ஆனால் பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் வீரர்களை ராகுல் டிராவிட், கங்குலி, ரவி சாஸ்திரி பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் இன்று கொல்கத்தாவில் கூடுகிறது. ஜக்மோகன் டால்மியா தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும்.

இதில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோர் பெயர்கள் முதன்மையாக பரீசிலிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top