நிலநடுக்கத்தால் இந்தியாவில் 51 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

cabinet123நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இந்தியாவில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாள நிலநடுக்கம் இந்தியாவில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பீகாரில் 38 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் 11 பேர், மேற்கு வங்கத்தில் 2 பேர் என இந்தியாவில் மொத்தம் 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

3 மாநிலங்களிலும் 200க்கும் மேற்படோர் காயமடைந்துள்ளனர். பீகாரில் மாநில அரசு சார்பில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் மீட்கும் வகையில் பேரிடர் மீட்புக் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

நிலநடுக்கம் தொடர்பாக, மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவரச ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, மருத்துவக் குழுவுடன், 460 தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் நேபாளத்திற்கு மீட்புப் பணிக்காக உடனடியாகச் சென்றனர். மீட்புப் பணிக்காக இந்திய விமானப்படை விமானங்களும் அனுப்பப்பட்டுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top