நிலநடுக்கத்தால் இந்தியாவில் 20 பேர் உயிரிழப்பு!

nepal-earthquake-650_650x400_51429956049நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவில் 20 பேர் உயிரிழந்தனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதன் எல்லைப் பகுதியான பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உணரப்பட்டது. பீகாரில் பெரும்பாலான பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 15 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால்‌ பீதியடைந்த மக்கள் வீதியிலேயே தஞ்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பீகாரில் முழு வீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் 3 பேரும் உத்தரபிரதேசத்தில் 2 பேரும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், மியான்மார், மிசோரம், சிக்கிம், ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் உணரப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top