ஐபிஎல் போட்டி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி!

966a156f-9727-4153-a6c8-1c5d5a3cbe89_S_secvpfஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்து வாட்சன் ரகானே உள்ளிட்ட பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெயில் கோலி இருவருமே அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். வாட்சன் வீசிய 5 வது ஓவரில் 20 ரன்களுடன் கிறிஸ் கெயில் வெளியேற, அடுத்து வந்த டி வில்லியர்ஸ் கோலியுடன் ஜோடி சேர்ந்து சரமாரியாக ஷாட்களை அடித்தார்.

மறுமுனையில் கோலியும் அதிரடியாக ஆடி 46 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இருவரது அதிரடியாலும் 16 வது ஓவரின் முதல் பந்திலேயே 134 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top