20 தமிழர்கள் படுகொலையை கண்டித்து போஸ்டர்: பெ.மணியரசனை கைது செய்ய காவல்துறை தீவிரம்!

பெ.மணியரசன்ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்தேசிய பேரியக்கத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இந்த போஸ்டரில் பயன்படுத்தபட்ட வாசகங்கள் இரு மாநில உறவை பாதிப்பதாகக் கூறி அந்த இயக்கத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகி கைது செய்ய பட்டுட்டுள்ளார்.

இன்று மதியம் திருச்சி காவல்துறையினர் சென்னையில் அவர்கள் அலுவலகத்தில் வந்து அந்த போஸ்டரின் மாதிரியை வாங்கி சென்றனர். தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் மீது வழக்கு பதிந்துள்ள காவல்துறை அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறது.

11161348_10205518297049674_7517991751781795020_n

 

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ் தேசிய பேரியக்கத்தின் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மலையாளி, கன்னடர், தெலுங்கர், சிங்களர்கள் தமிழர்களின் உரிமைகளை பறிக்கிறார்கள். தமிழர்களின் உயிர்களை பறிக்கிறார்கள். இந்தியாவை நம்பி அநாதையானோம். திராவிடத்தை ஏற்று ஏமாளியானோம். தமிழ் தேசியமே தற்காப்பு என அந்த போஸ்டர்களில் வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top