நிதி மோசடி: இலங்கையில் பசில் ராஜபக்சே உட்பட 3 பேர் கைது!

basil-rajapaksaநிதி மோசடியில் ஈடுபட்டதாக இலங்கையின் முன்னாள் அமைச்சரும் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சே உட்பட 3 பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிதி மோசடி தொடர்பாக இலங்கை நிதி குற்ற தடுப்பு பிரிவு போலீசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். நேற்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடத்திய குற்ற தடுப்பு பிரிவு காவல்துறையினர் பின்னர் கைது செய்தனர். அவருடன் பொருளாதார அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜெயதிலக்க, மற்றும் திட்ட பணிப்பாளர் ரணவக்க ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இதனை பசிலின் வழக்கறிஞர் டிசில்வா உறுதி செய்துள்ளார். விசாரணைக்காக இவர்கள் கடுவல நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top