19- வது சட்டத்திருத்த மசோதா: இலங்கையில் ஏப்ரல் 28-ம் தேதி வாக்கெடுப்பு!

srilanga-parlimentஇலங்கை அதிபருக்கான அதிகாரங்களை குறைக்கும் 19- வது சட்டத்திருத்த மசோதா மீது வரும் 28-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர் ராஜபக்சேவிற்கு ஊழல் தடுப்பு பிரிவு, சம்மன் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 19ஆவது சட்டத் திருத்தத்தின் மீதான விவாதம் நேற்று நடைபெறவில்லை.

விவாதம் வரும் 27-ம் தேதி நடைபெறும் என்றும், மறுநாள் வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் சபாநாயகர் லட்சுமன் கிரிலா தெரிவித்துள்ளார். 19-வது சட்டத்திருத்த மசோதா நிறைவேறிய பிறகு, நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் சிறிசேன திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்குப் பிறகு ஜுன் அல்லது ஜுலை மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top