தாய்லாந்தில் பள்ளிப் பேருந்து விபத்து: மாணவர்கள் உட்பட 15 பேர் பலியான பரிதாபம்!

road accidentதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து லாரியுடன் மோதிய விபத்தில் 13 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர்.

தாய்லாந்தில் நகோன் ரட்சசிமா பகுதியில் இருந்து பள்ளிப் பேருந்து ஒன்று மாணவர்களை கடற்கரை நகரமான பட்டயாவிற்கு ஏற்றி சென்று கொண்டிருந்தது. பேருந்து பாங்காக் அருகேயுள்ள ப்ரச்சின்புரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியுடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் மரணமடைந்தனர்.

படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 30 பேரில் நால்வர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் அனைவரும் 10 முதல் 14 வயதுடையவர்கள் ஆவார்கள். விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. எனினும் பேருந்தின் பிரேக் செயலிழந்திருக்கலாம் அல்லது டிரைவர் கவனக்குறைவுடன் பேருந்தை இயக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top