ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பில் 35 பேர் பலி

iraq-35-died2822014ஈராக்கில் பாக்தாத் அருகேயுள்ள சதர் சிட்டி மாவட்டத்தில் பழைய மார்க்கெட் உள்ளது. இங்கு நேற்று அங்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 25 பேர் அதே இடத்தில் பலியானர்கள். 45 பேர் காயம் அடைந்தனர்.

மேலும், சதர்சிட்டியில் ஒரு மினிபஸ்சில் குண்டு வெடித்தது. அதில் பஸ்சில் பயணம் செய்த 5 பேர் கொல்லப்ட்டனர். 14 பேர் காயம் அடைந்தனர்.

இவை தவிர வடக்கு ஷாப் பகுதியில் மற்றொரு மினி பஸ்சில் குண்டு வெடித்தது. அதில் 5 பேர் லியானர்கள். 11 பேர் காயம் அடைந்தனர். இந்த 3 சம்பவங்களிலும் மொத்தம் 35 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயம் அடைந்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top