பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை துவக்கம்!

BhavaniSinghஜெயலலிதா சொத்து வழக்கில் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானார். விசாரணை முடிந்து தீர்ப்பை தனி நீதிபதி குமாரசாமி ஒத்தி வைத்துள்ளார்.

இந்த நிலையில் அப்பீல் விசாரணையில் பவானிசிங் அரசு வழக்கறிஞராக ஆஜரானது செல்லாது என்றும் வேறு வழக்கறிஞர் நியமிக்க கோரியும் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் பானுமதி, மதன் பி.லோகூர் அடங்கிய பெஞ்ச் இரு வேறு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இன்று அன்பழகன் மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்லா சி.பந்த் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணை தொடங்கியது. அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜுனா ஆஜராகி வாதாடினார்.

அப்போது நீதிபதி பந்த் அவரிடம், ஒரு வழக்கில் அரசு வழக்கறிஞர் நியமனத்தை தனி நபர் எப்படி கேள்வி எழுப்ப முடியும்? என்றார்.

அதற்கு வழக்கறிஞர் அந்தியர் ஜுனா பதில் அளிக்கையில், இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு மாற்ற காரணமாக இருந்தவரே அன்பழகன்தான் என்றார்.

தொடர்ந்து நீதிபதி அவரிடம், ஒவ்வொரு முறையும் அரசு வழக்கறிஞர் நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்புவது ஏன்? விசாரணை நீதிமன்றத்தில் பவானிசிங் எப்படி செயல்பட்டார்? என கேள்வி எழுப்பினார்.

அதன் அன்பழகன் வழக்கறிஞர் கூறும்போது, பவானி சிங் செயல்பாடுகள் சந்தேகப்படும்படி இருக்கிறது. அவர் விசாரணையில் ஆஜராகாமலும், ஜாமீனை எதிர்க்காமலும் செயல்பட்டார் என்றார்.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top