சென்னை மெட்ரோ ரயில் சேவையை துவங்குவது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் ஆலோசனை!

metro railசென்னை மெட்ரோ ரயில் சேவை தொடர்பான ஆலோசனை கூட்டம் கோயம்பேட்டில் நடைபெற்று வருகிறது.

ரயில்வே பாதுகாப்புத்துறை ஆணையர் எஸ்.கே. மிட்டல் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால், திட்டப் பொது மேலாளர் ராமநாதன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மெட்ரோ ரயில் தொடர்பாக, கடந்த 6-ம் தேதி, மிட்டல் தலைமையிலான குழு முதல் கட்ட ஆய்வை நடத்தியது. இது தொடர்பான 5 பக்க ஆய்வறிக்கை ரயில்வே துறையிடமும், மத்திய அரசிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட ஆய்வு தொடர்பாகவும், அடுத்து நடக்க இருக்கும் 2-ம் கட்ட ஆய்வு தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயிலின் உறுதித்தன்மை, பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, இரண்டாம் கட்டமாக ஆய்வு செய்யப்பட உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top