பிப்ரவரி 28 – வரலாற்றில் இன்று!

dr rajendra prasad1922 – எகிப்தின் விடுதலையை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.

1935 – வொலஸ் கரோதேர்ஸ் என்பவரினால் நைலோன் கண்டுபிடிக்கப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் யூஎஸ்எஸ் ஹூஸ்டன் என்ற கப்பல் இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் இடம்பெற்ற போரில் ஜப்பானினால் மூழ்கடிக்கப்பட்டதில் 693 பேர் கொல்லப்பட்டனர்.

1947 – தாய்வானில் அரசுக்கெதிராக இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. 30,000 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

1953 – ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.

1963 – இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் மரணமடைந்தார்.

1986 – சுவீடன் பிரதமர் ஓலொஃப் பால்மே ஸ்டொக்ஹோம் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1991 – முதலாம் வளைகுடாப் போர் முடிவுற்றது.

1998 – கொசோவோவில் கொசோவோ விடுதலை இராணுவத்தின் மீது செர்பியக் காவற்துறையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.

2007 – புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை நெருங்கியது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top