கேரள ஆளுநர் சதாசிவத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

justice sathasivamகேரள ஆளுநரும் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சதாசிவம் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரான சதாசிவம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின் தாம் சட்டப் பணி தொடர்பான அமைப்பில் தொடர்ந்து பணியாற்ற விருப்பம் இருப்பதாக மத்திய அரசிடம் தனது கருத்தை தெரிவித்தார்.அவரின் கருத்தை ஏற்று தேசிய மனித உரிமைகளின் ஆணையத்தின் தலைவராக சதா சிவத்தை நியமிக்க முடிவு செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வால் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியதாவது:

மனித உரிமைகள் ஆணையம் 1993-ம் ஆண்டு அமைக்கபட்டது இதன் தலைவராக நியமிக்கபடுவதற்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி இருக்க வேண்டும்.

அவர் அரசியல் சாராதவராக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் மனித உரிமைகளை நிலைநாட்ட முடியும்.நீதிபதி தூய்மையாக இருந்தால் தான் நீதியை நிலைநாட்ட முடியும்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக சதாசிவத்தை மட்டுமே நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

சதாசிவத்தை மத்திய அரசு தவறாக தேர்ந்தெடுத்துள்ளது அவரை அந்த தகுதியில் இருந்து நீக்க வேண்டும்.

தமது பதவியை தவறாகப் பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக அரசிடம் இருந்து தனது மகனின் மாமியாருக்கு நிலத்தை வாங்கி மருமகள் பெயரில் மாற்றியவர் சதாசிவம். கோவையில் தன் மகனுக்கு மாருதி கார் ஏஜென்சி உரிமை பெறுவதற்காக ரூ 5 கோடி டெபாசிட் செலுத்தாமல் விலக்கு பெற்றவர் சதாசிவம்.

அவரை மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமத்தால் நீதியை நிலைநாட்ட முடியாது.அவர் ஒரு கட்சிக்குதான் சாதமாக செயல்பட கூட வாய்ப்பு உள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு சுதந்திரமாக செயல்படக்கூடியவர் தான் இருக்க வேண்டும். சதாசிவம் நியமனத்திற்கு உச்சநீதி மன்றம் தடைவிதிக்க வேண்டும்.

இவ்வாறு பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வால் கூறி உள்ளார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top