ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

iraq-jpg20150417200719ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே நடந்த தற்கொலை படை தாக்குதலில் 3 பேர் பலியாகினர்.

ஈராக்கில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற குர்தீஸ் பகுதியில் ஏர்பில் நகரில் அமெரிக்க தூதரக அலுவலகம் உள்ளது. அதன் அருகே ஒரு காரில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

அங்கிருந்த சில கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகினர். 5 பேர் காயம் அடைந்தனர். இந்த தகவல் வாஷிங்டனில் இருந்து வெளியிடப்பட்டது.இந்த தாக்குதலில் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அவர்கள் பத்திரமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு நிரப்பிய காரில் அதிக வேகமாக வந்து வெடிக்க செய்துள்ளார்கள். அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா? என தெரியவில்லை. ஆனால் இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top