20 தமிழர்கள் படுகொலை: மனித உரிமை ஆணைய அதிகாரிகள் புதுவையில் வாலிபரிடம் விசாரணை

392699be-5c07-42f9-8f1f-e325ba5f6464_S_secvpfஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில் 20 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திர போலீசாரின் இந்த கொடூர செயலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆந்திர ஐகோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது.

அதோடு தேசிய மனித உரிமைகள் ஆணையமும் விசாரணையை தொடங்கி உள்ளது. ஆந்திர மாநில போலீசாரிடம் பிடிபட்டு தப்பி வந்த நபர்களிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஆந்திர போலீசாரிடம் தப்பி வந்தவர்களில் திருவண்ணாமலை மாவட்டம் மலை கிராமமான ஜமுனாமருதூர் பகுதியை சேர்ந்த வாலிபர் இளங்கோவும் (வயது 30) ஒருவர். இவரிடம் மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் புதுவையில் விசாரணை நடத்தினர்.

புதுவை இந்திரா நகரில் உள்ள அரசு விருந்தினர் விடுதியில் விசாரணை நடந்தது. தேசிய மனித உரிமைகள் ஆணைய துணை பதிவாளர் பாஸ்கர் தலைமையில் அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
விசாரணை காலை தொடங்கி மதியம் 3 மணி வரை 5 மணி நேரம் நடந்தது. விசாரணையின்போது மொழிபெயர்ப்பாளர்களும் உடன் இருந்தனர். விசாரணைக்கு பின் வாலிபர் இளங்கோவை அதிகாரிகள் தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர்.

விசாரணையில் இளங்கோ ஆந்திர போலீசாரின் சித்திரவதை குறித்து தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கருதியே இளங்கோவை புதுவைக்கு அழைத்து வந்து விசாரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top