ராஜிவ்காந்தி படுகொலை தொடர்பாக மறு விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

rajiv-gandhi1முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கினை மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சாந்தகுமரேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ராஜிவ்காந்தி கொலை வழக்கில், சிபிஐ விசாரணை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருந்தார். குறிப்பாக சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் தூக்கிலிடப்படவில்லை என்றால் மகிழ்ச்சியடைவேன் என்று ராஜிவ்காந்தி கொலை வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் கூறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும் ராஜிவ்காந்தியுடன் புவனேஸ்வர் மற்றும் விசாகபட்டிணம் வரை பயணம் செய்த தனி பாதுகாப்பு அதிகாரி ஒ.பி.சாகர், சென்னை பயணத்தின்போது மட்டும் இல்லாமல் போனது ஏன் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளையும் அவர் எழுப்பி இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மணிக்குமார் ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்திய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top