20 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை!

tamilnadu-secretariat-old-buildingதிருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

தமிழ்நாடு மக்கள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். தமிழர்கள் படுகொலை குறித்து, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முன்னதாகப் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்தார்.

வழக்கறிஞர்கள், அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து இதுதொடர்பாக அறிக்கை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், ஆந்திர சிறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்கவும் அவர் கோரிக்கை விடுத்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top