திராவிடர் கழகத்தினர் மீது போலீஸ் தடியடி: இளங்கோவன்–திருமாவளவன் கண்டனம்

11-1428743808-evks-elangovan-11-6600திராவிடர் கழகத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு இளங்கோவன், திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

பெரியார் திடல் வளாகத்திற்குள்ளே திராவிடர் கழகம் அமைதியாக நடத்திய நிகழ்ச்சியை வன்முறை வெறியாட்டத்தின் மூலம் சீர்குலைக்கும் நடவடிக்கையை அனுமதித்த காவல் துறையினரை வன்மையாக கண்டிக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல், நிகழ்ச்சி முடிந்து வெளியூர் செல்ல முயன்ற 10–க்கும் மேற்பட்ட திராவிடர் கழக தொண்டர்கள் நேற்றிரவு பெரியார் திடலுக்கு வெளியே வந்தபோது காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. வகுப்புவாத சக்திகள் வேரூன்றி தலைதூக்க முயற்சிப்பதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இச்செயல்கள் மதச்சார்பற்ற சக்திகளுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகும்.
எனவே தமிழகத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிற வகுப்புவாத, பாசிச, பிற்போக்கு சக்திகளின் வன்முறை வெறியாட்டத்தை முறியடிக்க தமிழகத்தில் உள்ள ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்.

thirumavalavanவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

பெரியார் திடலுக்குள் நுழைய முயற்சித்தவர்களை திராவிடர் கழகத்தினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது காவல்துறையினர் திராவிடர் கழகத்தினர் மீது திடீரெனத் தடியடி நடத்தியுள்ளனர். இதில், திராவிடர் கழகத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர்.

21 குடும்பத்தினர் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய தாலிகளை அகற்றினார்கள். இது எந்த வகையிலும் சட்டத்திற்கு விரோதமானதல்ல. காவல்துறையினரின் தடியடியின்போது குறிப்பாக, திராவிடர் கழகத்தினரே குறி வைத்துத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். சட்டம்–ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையே அதற்கு நேர்மாறாகச் செயல்படுவது வேதனைக்குரியதாகும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top