அமெரிக்காவில் அணுக்கழிவில் இருந்து கதிர்வீச்சு; 13 ஊழியர்கள் பாதிப்பு

atomic wasteஅமெரிக்காவில் அணுக்கழிவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலணில் இருந்து கதிர் வீச்சு ஏற்பட்டுள்ளது. நியு மெக்சிகோவில் பூமிக்கு அடியில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளில் இருந்து வெளியான கதிர் வீச்சினால் 13 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு அதனுடைய கழிவுகள் பூமிக்கு அடியில் சேமித்து வைக்கப்படுள்ளது. அணுக்கழிவுகள் கசிந்து அதில் இருந்து கதிர் வீச்சுக்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து அங்கு வேலை செய்த ஊழியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களை பரிசோதனை செய்ததில் 13 ஊழியர்களுக்கு அமெரிகியம்-241 பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top