ஆந்திரா-தெலுங்கானா என்கவுன்டர்களை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

INDIA-UNREST-SMUGGLINGஆந்திராவில் திருப்பதி அருகே அண்மையில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதேபோல், தெலுங்கானாவில் விசாரணைக் கைதிகள் 5 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த 2 சம்பவங்களையும் கண்டித்து நேற்று மதியம் டெல்லியில் ஜன்ஹஸ்தாசர், ஆல் இந்தியா பீப்பிள்ஸ் போரம், பி.யு.சி.எல்., சிறுபான்மையினர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் அசோகா சாலையில் உள்ள ஆந்திரா பவன் வளாகத்துக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த அமைப்புகளில் முக்கிய பொறுப்பை வகிக்கும் என்.டி.பஞ்சோலி, கவிஞர் மாலதி மைத்ரி, மனித உரிமை ஆர்வலர் கவிதா கிருஷ்ணன், இஷ் மிஷ்ரா ஆகியோர் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினர்.

அப்போது ஆந்திரா, தெலுங்கானா அரசுகளை கண்டித்து அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர். என்கவுன்டரில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்குகள் பதிவுசெய்து அவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும், என்கவுன்டர்கள் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top