கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சுங்க கட்டண மையம் முற்றுகை!

10985371_959913207376966_252433874071296812_nசுங்கக்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் சுங்கக் கட்டண வசூல்மையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

சுங்கக் கட்டணம் என்ற பெயரில் தனியார் கும்பல் அப்பாவி ஏழை எளிய கிராம மக்களிடம் இருந்து பகல் கொள்ளையடித்து வருவதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் காலை 10 மணிக்கு “முற்றுகையிடும்” போராட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி சுங்கச் சாவடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகியுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top