ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: பஞ்சாப்–ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

kingsxi_gettyஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடக்கும் 3–வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்–ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு புனேயில் நடக்கிறது.

கடந்த ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் சிறப்பாக விளையாடியது. இறுதிப்போட்டியில் கொல்கத்தாவிடம் தோற்றது. ஜார்ஜ் பெய்லி தலைமையிலான அந்த அணியில் ஷேவாக், மேக்ஸ்வெல், டேவிட் மில்லர் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர்.

குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. அவரது அதிரடி ஆட்டத்தை காண ஆவலுடன் இருக்கிறார்கள். தமிழக வீரர் முரளி விஜய் பஞ்சாப் அணியில் இருக்கிறார்.

பந்து வீச்சில் மிச்செல் ஜான்சன், சந்தீப் சர்மா, அக்‌ஷர் பட்டேல் போன்றோர் உள்ளனர். ராஜஸ்தான் அணியும் வலுவாகவே இருக்கிறது. ஷேன் வாட்சன் தலைமையிலான அந்த அணியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித், பவுல்க்னெர் மற்றும் ரகானே, பின்னி போன்ற வீரர்கள் உள்ளனர்.

பஞ்சாப் அணிக்கு சவால் அளிக்கக்கூடிய வகையில் ராஜஸ்தான் விளையாடும். இதனால் இந்த ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top