சென்னையிலிருந்து ஆந்திராவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் முழுவதுமாக நிறுத்தம்!

apsrtcசென்னையிலிருந்து ஆந்திராவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் நேற்று மாலை முதல் முழுவதுமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

சித்தூர் மாவட்டம் சேசாசலம் மலைப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து, சென்னை கோயம்பேட்டில் ஆந்திர பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. கல்வீசி தாக்குதல் நடத்திய அதியமான், பாலன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, சென்னையிலிருந்து இயக்கப்படும் ஆந்திர பேருந்துகளில் 60க்கும் அதிகமான பேருந்துகள் மாலை முதல் முழுவதுமாக கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதேபோன்று, வேலூர், திருத்தணி ஆகிய பகுதிகளிலிருந்தும் ஆந்திர அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆந்திராவிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் இயக்கப்படவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top