ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி: கோலி சதத்தால் வீழ்ந்தது வங்கதேசம்!

virat kohliஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், கோலியின் அபார சதத்தால் வங்கதேசம் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

முதலில் விளையாடிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்தது. ரஹீம் அபாரமாக விளையாடி தனது 2வது சதத்தை நிறைவு செய்தார். தொடக்க வீரர் ஹக்கீயூ 77 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர்.

இந்திய தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஸ்வர்குமார், ஆரோன், அஸ்வின் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் தவான் 28 ரன்னிலும், ரோகித் சர்மா 21 ரன்னில் ஆட்டம் இழந்தனர். இதைத் தொடர்ந்து கேப்டன் கோலி- ரஹானே ஜோடி சேர்ந்தது. இந்த ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

கேப்டன் கோலி பொறுப்புடன் விளையாடி தனது 19வது சதத்தை விளாசினார். மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த ரஹானே 73 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் கோலி 122 பந்துகளில் 16 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 136 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

இந்திய அணி 49 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்றைய போட்டியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top