திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர காவல்துறை துப்பாக்கிச்சூடு: 20 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

Combing_red_sander_2366256gதிருப்பதி வனப்பகுதியில் ஆந்திர காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் உட்பட 20 தொழிலாளர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

சேஷாசலம் வனப்பகுதியில் ஈசகுண்டா என்ற இடத்தில் இன்று காலை இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்த 20 பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேரும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரும் அடங்குவர். எஞ்சியவர்களில் இருவர் சர்வதேச செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்ற ஆறு பேரை அடையாளம் காணும் பணி நடைபெறுவதாகவும், செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி கங்காராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஈசகுண்டா வனப்பகுதியில், செம்மரங்களை வெட்டிக் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு தேடுதல் வேட்டையில் ஆந்திர காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழர்கள் உள்பட 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து சேஷாலம் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் இருநூறுக்கும் மேற்பட்ட செம்மரக் கடத்தல்காரர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திர காவல்துறையினரின் இந்த கொடூரத் தாக்குதலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top