மகாராஷ்ட்ராவில் 7 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

சிறுவன் பாலியல் வன்கொடுமைமகாராஷ்ட்ர மாநிலத்தில், 7 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஷகில் என்ற அந்தச் சிறுவனின் குடும்பம் சில நாட்களுக்கு முன்னர்தான் பிழைப்புத் தேடி பிவாண்டி பகுதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அருகில் உள்ள லங்கார் பகுதிக்கு சாப்பாட்டுக்காகச் சென்ற சிறுவனை, சிலர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், தீவைத்தும் கொளுத்தி உள்ளனர்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள் சிறுவனை மீட்டு தானேவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீப்பிடித்து எரிந்ததில் சிறுவனின் உடலில் 30 சதவீத பகுதி புண்ணாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 3 பேரைக் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top