மியாமி ஒபன் டென்னிஸ் போட்டி: சானியா-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்!

miamichamps-600x400அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது.

மகளிர் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல்நிலை ஜோடியான சானியா- ஹிங்கிஸ் இணை, தரவரிசை பட்டியலில் 2-ம் நிலையில் உள்ள எலெனா வெஸ்னினா-எகடரினா மகரோவா ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டில் கடும் போட்டி நிலவிய போதிலும் 7-5 என்ற கேம் கணக்கில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி கைப்பற்றியது.

இரண்டாவது கேமை 6-1 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றிய இந்த ஜோடி 66 நிமிடத்திலேயே ஆட்டத்தை வென்று பட்டத்தை கைப்பற்றியது. இரண்டு வாரங்களுக்கு முன் பி.என்.பி. பாரிபாஸ் ஓபன் பைனலில் சாம்பியன் பட்டம் வென்ற சானியா-ஹிங்கிஸ் ஜோடி, அதே வேகத்தில் மியாமி ஓபன் இறுதிப்போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top