மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

djokovic-trophy-exlargeமியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் செர்பியாவை சேர்ந்த உலகின் நம்பர்.1 வீரரான ஜோகோவிச் பட்டம் வென்றார்.

2 மணி நேரம் 46 நிமிடம் நடைபெற்ற கடுமையான இப்போட்டியில், தரவரிசை பட்டியலில் 3 ஆம் நிலை வீரரான முர்ரேவுடன், ஜோகோவிச் மோதினார். முதல் செட்டில் இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையான சவாலை தந்ததால் அது டை-பிரேக்கர் வரை சென்றது. அதில் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் முதல் செட்டை 7-6(7-3) என்ற கேம் கணக்கில் கைப்பற்றினார்.

2வது செட்டில் சுதாரித்து விளையாடிய முர்ரே 4-6 என்ற கேம் கணக்கில் கைப்பற்றினார். ஆனால் 3வது செட்டில் மீண்டும் பார்முக்கு வந்த ஜோகோவிச் 6-0 என்ற கேம் கணக்கில் கைப்பற்றி, சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் 5வது முறையாக மியாமி ஒபன் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், முர்ரேவுக்கு எதிராக 18-8 போட்டிகளில் வெற்றி என்ற வாழ்நாள் சாதனையையும் படைத்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top