சீனா-ரஷ்யா இடையே புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி துவக்கம்

china-russiaசீனாவுடன் ரஷ்யாவை இணைக்கும் புதிய ரெயில் பாலம் ஒன்றினை அமைக்கும் பணிகள் அடிக்கல் நாட்டு விழாவுடன் இன்று துவங்கியது.

வடகிழக்கு சீனாவின் ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள டாங்ஜியாங் துறைமுகத்துடன் ரஷ்யாவின் நிழ்னெலெனின்ஸ்கோயே பகுதியை இணைக்கும் இந்த ரெயில் பாலத்தின் வழியாக இரு நாடுகளுக்கும் இடையில் ஆண்டுதோறும் சுமார் 21 மில்லியன் டன் சரக்குகளை கையாள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான 5 ஆண்டு கால ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளது.

ரஷ்யாவில் அமுர் என்றும் சீனாவில் ஹெய்லாங் என்றும் அழைக்கப்படும் ஆற்றின் மீது இந்த புதிய ரெயில் பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் இன்று துவங்கியது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top