நிலக்கரி சுரங்க முறைக்கேடு: மன்மோகன் சிங்கை விசாரிக்க இடைக்கால தடை!

பிரதமர் மன்மோகன்சிங்நிலக்கரி சுரங்க முறைக்கேடு வழக்கில் மன்மோகன்சிங் உள்பட 5 பேரை  விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நிலக்கரி சுரங்க முறைக்கேடு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது, இந்த வழக்கில் அவரையும் சேர்த்து விசாரிக்கும் படி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மன்மோகன்சிங்  உட்பட  5பேர் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, நிலக்கரி சுரங்க முறைக்கேடு வழக்கில் மன்மோகன்சிங் உள்பட 5 பேரை சிபிஐ விசாரிக்க தடை விதித்து. மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பரேக், குமாரமங்கலம் பிர்லா உள்பட 5 பேருக்கு நேரில் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனுக்கும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் சிபிஐ பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் அளித்து, 4 வார காலம் வழக்கை ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top