தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி சென்னையில் வைகோ ஆர்ப்பாட்டம்!

vaikoஇலங்கையில் தமிழ் ஈழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இன படுகொலைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், இலங்கையில் நடந்தது போர் குற்றம் அல்ல, இனப்படுகொலை என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று ஈழ தமிழர்களுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

இதில் திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், மே–17 இயக்க நிர்வாகி திருமுருகன் காந்தி, இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வடசென்னை மாவட்ட செயலாளர் ஜீவன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பலர் அதில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மத்திய அரசை கண்டித்தும், தமிழ் ஈழத்தை வலியுறுத்தியும் பதாகையை கொண்டு வந்தனர். போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top