நிலக்கரி ஊழல் வழக்கு: ஏப்ரல் 1-ல் மன்மோகன் சிங்கின் மனு விசாரணை!

 மன்மோகன் சிங்நிலக்கரி சுரங்க வழக்கில் சிபிஐ சம்மனை எதிர்த்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 1-ம் தேதி விசாரிக்கிறது.

மன்மோகன் சிங்குக்காக ஆஜராகவுள்ள மூத்த வழக்கறிஞர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ஏப்ரல் 1-ம் தேதி விசாரணக்கு ஏற்கப்படும் மனுக்களில் மன்மோகன் சிங்கின் மனுவும் பட்டியிலிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2005-ம் ஆண்டு பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒடிஷா மாநில தலாபிரா சுரங்கங்களை ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிர்லா குழுமத் தலைவர் குமாரமங்கலம் பிர்லா உட்பட 6 பேருக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

ஏப்ரல் 8-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மன்மோகன் சிங், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி.பராக் ஆகியோர் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.

மன்மோகன் சிங் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தலைமையிலான வழக்கறிஞர் குழுவினர் மனுவை தாக்கல் செய்தனர். மன்மோகன் சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்று எந்த குற்றச்சாட்டும் இல்லை. அரசு சார்பில் முடிவு எடுப்பதை குற்றம் என்று கூற முடியாது என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top