ஐ.பி.எல் சூதாட்டத்தில் விஜய் மல்லையாவுக்கு நேரடித் தொடர்பு: வின்டு தாரா சிங் பரபரப்புத் தகவல்!

vijay mallyaஐ.பி.எல் சூதாட்டங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக சூதாட்டத்தில் கைதான நடிகர் வின்டு தாரா சிங் தெரிவித்துள்ளார். 

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர் நடிகர் வின்டு தாரா சிங். இவர் தற்போது ஜி நியூஸ் தொலைக்காட்சி நடத்திய சிறப்பு பேட்டியில் ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனுக்கும், முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடிக்கும் இடையிலான சண்டைதான் இந்த ஐபிஎல் சூதாட்டம் பற்றிய செய்தி வெளிவர முக்கிய காரணம் ஆகும்.சீனிவாசனை பழிவாங்க தனக்குக் கிடைத்த வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொண்டார் லலித் மோடி.

உண்மையில் இந்த பெட்டிங் நடைபெற முக்கியக் காரணமே லலித் மோடிதான். சரத் பவார் கண்காணிப்பில் அவர்தான் தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக ஐபிஎல்லைத் தொடங்கினார். 
மேலும் பவார் ஆதரவுடன், சசி தரூரை வைத்து பல வேலைகளைச் செய்தார் லலித் மோடி. அதுதான் பெட்டிங் தலைவிரித்தாட முக்கிய அடிப்படையாக அமைந்தது.

நான் பெட்டிங்கில் ஈடுபட்டது உண்மைதான். ஆனால் சீனிவாசனுக்கு எதிராக என்னை தூண்டில் மீனாக பயன்படுத்திவிட்டார்கள். நான் கைது செய்யப்பட்ட போது போலீசார் என்னிடம் சீனிவாசன் சிக்கும் வரை உங்களை விடக் கூடாது என்று சரத் பவார் நெருக்கடித் தருவதாகத் தெரிவித்தனர்.

ஐ.பி.எல். பெட்டிங்கில் பெரும் நஷ்டத்தையே அடைந்து வந்தார் குருநாத் மெய்யப்பன். அவர் பெட்டிங்கில் ஈடுபட்டது தெரியவந்தால் அது அவரது மாமனார் சீனிவாசனை பாதிக்கும் என்பதால் தான் என்னை வைத்து சீனிவாசனை மடக்க திட்டம் தீட்டினர்.

உண்மை என்னவென்றால், ஒட்டு மொத்த ஐ.பி.எல். தொடருமே பிக்ஸ் செய்துதான் நடத்தப்படுகிறது. இதில் நேரடியாக ஒரு அணியின் உரிமையாளரே சம்மந்தப்பட்டுள்ளார். அவர் வேறு யாருமல்ல, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாதான். சூதாட்டம் மூலம் மல்லையா ரூ. 200 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்து விட்டார். ஆனால் இது யாருக்குமே தெரியாது எனபது தான் உண்மை. 

இவ்வாறு அவர் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top