பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா பக்கிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

209083

அடிலெய்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான சர்ப்ராஸ் 10 ரன்களும், சேஷாத் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய கேப்டன் மிஸ்பா உல் ஹக் 34 ரன்கள் எடுத்த நிலையிலும், ஹாரிஸ் சொகைல் 41 ரன்கள் எடுத்த நிலையிலும், பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி 213 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 214 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

209067

இதனையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. சுமித்துடன் வாட்சன் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல்- வாட்சனுடன் சேர்ந்து அதிரடி காட்டினார். இதனால் ஆஸ்திரேலியா 33.5 ஓவரில் 216 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

209079

வாட்சன் 64 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 44 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய ஹாசில்வுட் ஆட்டநாயகனாகத் தேர்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலிய அணி வரும் 26 ஆம் தேதி சிட்னியில் இந்திய அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top