நில மசோதாவை அதிமுக அரசு உள்நோக்கத்துடன் ஆதரிக்கிறது: கருணாநிதி தாக்கு!

கருணாநிதிநிலம் கையப்படுத்தும் மசோதாவை அதிமுக அரசு உள்நோக்கத்துடன் ஆதரிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கை உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை வள்ளூவர்கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், மக்களவையில் நிறைவேறிய நிலம் கையப்படுத்தும் மசோதாவிற்கு அதிமுக அரசு உள்நோக்கத்துடன் ஆதரவு அளித்துள்ளதாக விமர்சித்தார். நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் எதிர்க்கின்ற வேளையில், இந்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற முயற்சிப்பது ஏன் என்றும் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top