மக்களின் எதிர்பார்ப்புகளை பா.ஜ.க. அரசு நிறைவேற்ற தவறிவிட்டது: பிரகலாத் மோடி!

Untitled 3மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்ற தவறிவிட்டது என்று மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் கடுமையாக சாடி உள்ளார்.

டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் அகில இந்திய நியாய விலைக்கடைகள் கூட்டமைப்பின் சார்பில் நடந்த தர்ணா போராட்டத்தில், பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி கலந்து கொண்டு பேசும்போது, ”மத்தியில் ஆட்சிக்கு வந்த பின், மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்களின் பிரச்னைகளையும் தீர்த்து வைக்க பா.ஜ.க. அரசு தவறிவிட்டது. எங்கள் போராட்டம் இங்கே நடத்தப்படுவதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தோல்வியே காரணம் ஆகும்.

நான் செய்வது எனது சகோதரருக்கு (நரேந்திர மோடி) எதிரான புரட்சி அல்ல. என்னை பொறுத்தவரை எனது சகோதரர் மதிப்பு மிக்கவர்தான். அவரை நான் மதிக்கிறேன். ஆனாலும், தொழில் ரீதியாக எனது குரலை சகோதரருக்கு முன்பாக எழுப்ப இந்த மேடைக்கு வந்திருக்கிறேன். எங்களுடைய பிரச்னைகளை பா.ஜ.க. கண்டு கொள்ளவில்லை என்றால் டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் நடந்ததுபோல் தான் உத்தரபிரதேசம், பீகார் மாநில சட்டசபை தேர்தல்களிலும் நடக்கும். நான் பா.ஜ.க.வின் உறுப்பினர் தான். ஆனாலும், தேசிய கட்சிகளின் தவறான கொள்கைகளை எதிர்க்கிறேன்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top