ஈழ விடுதலைப் போராட்டம் தீவிரவாதமா?: மோடியை கண்டித்து சாஸ்திரி பவன் முற்றுகை!

2 நாள் இலங்கை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இலங்கை பாராளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறியதை கண்டித்து தமிழர் விடியல் கட்சி சார்பில் இன்று சாஸ்திரி பவன் முற்றுகையிடப்பட்டது.

DSCN0517

பிரதமர் நரேந்திர மோடி தமிழ் அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை பயணம் மேற்கொண்டார். மோடியின் இந்தப் பயணம் அங்கு நடைபெற்ற இனப்படுகொலையை மறைக்கும் செயல் என ம.தி.மு.க, நாம்தமிழர், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தன. இந்நிலையில் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய மோடி, இலங்கை அரசு பயங்கரவாதத்தை ஒழித்துள்ளது என்று இலங்கையை பாராட்டினார்.

DSCN0554

இது தமிழ் அமைப்புகளிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஈழ விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைப் புலிகளையும் மோடி கொச்சைப்படுத்தியுள்ளார்” என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

DSCN0541

இதனை தொடர்ந்து இன்று பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு கைதாகினர். தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைத்திருந்த இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே பதினேழு இயக்கம், தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

DSCN0532

போராட்டத்தின் போது பேசிய தமிழர் விடியல் கட்சியின் நவீன், “மோடி இலங்கைக்கு சென்றதே தவறு. அங்கு சென்றது மட்டுமில்லாமல், அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஈழ விடுதலை போராட்த்தை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். இனி தமிழ்நாட்டில் பா.ஜ.க விற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்” என்று கூறினார்.

DSCN0568


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top