இலங்கை அதிபரின் அதிகாரங்கள் குறைப்பு: 19 ஆவது சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல்!

சிறிசேனாஅதிபரின் அதிகாரங்களை குறைப்பதற்கான 19 ஆவது சட்டத்திருத்தத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, 62 பக்க ஆவணங்களை தாக்கல் செய்தார்.

இதன்படி, ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம். நாடாளுமன்றத்தை தன்னிச்சையாக கலைக்கும் அதிபரின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைவராகவும், அரசின் தலைவராகவும் அதிபர் இருப்பார் என்ற நிலையில் மாற்றம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து உடனடியாக இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் தேர்தல் பரப்புரையின்போது, 100 நாள் செயல்திட்டத்தில், அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top