ராஜபக்சே – மோடி சந்திப்புக்கு இளங்கோவன் கண்டனம்!

EVKS Elangovanஇலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தையும், உரிமைகளையும் பறித்த முன்னாள் அதிபர் ராஜபக்சேவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆதரிப்பது ஏன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி, ராஜபக்சேவை சந்தித்துப் பேசியதை சுட்டிக்காட்டி இளங்கோவன் இவ்வாறு வினவியிருக்கிறார்.

இலங்கை தேர்தலில் அடைந்த தோல்விக்கு இந்தியாவின் ரா உளவுத்துறை அமைப்பே காரணம் என ராஜபக்சே கூறியிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள இளங்கோவன்,இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் உளவுத்துறையையே அவர் களங்கப்படுத்தியுள்ளதாகவும் சாடியுள்ளார்.

மேலும், ராஜபக்சேவின் இந்த குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவிக்காமல், அவரை சந்தித்து பேசியுள்ளதை விட இந்தியாவிற்கு வேறு தலைக்குனிவு இல்லை என்றும் இளங்கோவன் விமர்சித்திருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top